நாம் அனைவரும் ஏதாவது நாம் நினைத்த செயல் நடந்து விட்டால் சந்தோஷமாக கொண்டாடுவோம் நாம் நினைத்தபடி அது நடக்கவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவோம் அடடா இப்படி நடந்து விட்டது என்று சதா உச்சி கொட்டிக் கொண்டே இருப்போம். அதேபோல் யாராவது நமக்கு நன்றி பாராட்டா விட்டால் நாம் ஒரு செயலை செய்து அவர்கள் அதற்கு புன்னகை புரியாவிட்டால் மரியாதை செலுத்தி அவர்கள் மரியாதை செலுத்தாமல் இருந்தால் இப்படி பல்வேறு விஷயத்தில் நாம் எதிர்பார்ப்பு இயங்கிக் கொண்டே இருக்கும்…
நம்மைப் போல் பிறரையும் நேசிப்போம் நாம் எப்படி எல்லாம் இருக்கிறோமோ அப்படியே அவர்களும் நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அப்படி இல்லாத பொழுதும் மனவருத்தம் அடைவோம் மன வருத்தம் அடையும் பொழுது மனநிலையே மாறி நாம் நாமாக இல்லாமல் நாம் செயல்பாடுகள் எல்லாம் தலைகீழாக நடக்க ஆரம்பித்து விடும். வீட்டில் இருப்பவர்கள் கூட ஏன் இப்படி மாறிவிட்டாய் என்ன வந்தது உனக்கு என்று கேட்பார்கள். ஆனால் என் உறவினர் ஒருவர் அவர் வாழ்க்கையில் எது நடந்தாலும் எதற்குமே அளவுக்கு மீறி சந்தோஷமும் அடைய மாட்டார். வருத்தமும் பட மாட்டார். எப்பொழுதும் ஒரே மாதிரியான மன நிலையில் தான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் யார் எந்த கேள்வி கேட்டாலும் தடுமாறாமல் பதில் கூறுவார் அவரை பார்த்து எப்படி இப்படி உங்களால் இருக்க முடிகிறது என்றுதான் கேட்பார்கள் இது எல்லோருக்கும் சாத்தியப்படாத ஒரு மனநிலை. எந்த செயலை எடுத்தாலும் இதுவும் நல்லதுக்கே என்று கூறுவார் இப்படியே எல்லாத்தையும் கடந்து வருவார் நாமும் அப்படியே கடந்து வர வேண்டும் என்று கூறுவார் ஆனால் அந்த கடந்து விடும் என்ற வார்த்தையை சொல்லும்பொழுது சாதாரணமாக தான் தோன்றும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி பெறும் போதும் தோல்வி வரும்போதும் நவரசங்களிலும் அதை செயல்படுத்தி பார்க்கும் பொழுது தான் அதனுடைய வலிமை எவ்வளவு பெரிய ஆயுதம் என புரிகிறது. வாழ்க்கையில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் எதுவுமே மாறாது எல்லாம் கடந்து போகும் என்ற மனநிலையுடன் வாழ்வில் பயணிப்போம்..!!