மனதை தொட்ட பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

மனதைத்_தொட்ட_பதிவு

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு… என்கிறார்

மருத்துவர்…உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்…
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று “என்னங்க” என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

Read Previous

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி..??

Read Next

தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular