இந்த உலகில் குழந்தைகள் வெகு சுதந்திரமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு கடந்த கால நிகழ்வுகள் குறித்து கவலை இல்லை எதிர்கால தேவைகள் குறித்து அச்சமும் இல்லை இந்த கணத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்களின் கோபங்களும் சண்டைகளும் நிரந்தரமானவை இல்லை இன்னொரு குழந்தையுடன் சண்டை போட்டுவிட்டு சில நிமிடங்களில் இயல்பாக மீண்டும் பேச அவர்களால் முடியும். பெரியோர்கள் தான் அந்த கோபத்தை காலம் முழுக்க சுமக்கிறோம்…
கோபத்தையும் வெறுப்பையும் சுமக்காமல் இதர பொறுப்புகளையும் பெரும் சுமையாக கருதாமல் அறியா குழந்தையின் மனநிலையில் எதையும் நம்மால் அணுக முடிந்தால் போதும். நமக்கு சுதந்திரம் நிரந்தரமாக கிடைக்கும் எப்படிப்பட்ட சூழலையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் பொழுது. பிறரை புரிந்து கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளும் போது மனம் சுதந்திரமாக செயல்படுகிறது கல்வி பெறுவது அருகாமையில் இருந்து விடுதலைக்கு முக்கியமான அங்கம் ஆகும் பிறரின் நலனுக்காக உதவியாக இருப்பதும் மனம் சுதந்திரம் அடைவதற்கு காரணமாகும். ஒரு சுதந்திர சமூகத்தின் அடையாளம் பீரோவுக்கு பூட்டு போட்டு அது இருக்கும் அறைக்கு இன்னொரு பூட்டு வீட்டுக்கு பெரிதாக ஒரு பூட்டு இதற்கு வெளியே கேட்டுக்கு பூட்டு இதில் வலுவான பூட்டு என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்ய தேவை இருக்காது அளவுக்கு பாதுகாப்புகள் இருப்பது ஒரு தேசத்தின் சுதந்திர வாழ்வை உணர்த்தும். மனம் அச்சமின்றி இருப்பதை உண்மையான சுதந்திரம் அங்குதான் வேறு யாராலும் தொட முடியாத எல்லைகளை மனிதர்கள் துடுவார்கள். தலைநிமிர்ந்து பெருமிதத்துடன் உழைப்பார்கள். உள்ளத்தின் ஆசைகளை உணர்ந்து தங்கள் கடமையை செய்வார்கள் என்றால் ரவீந்திரநாத் தாகூர் அனைவரும் இப்படிப்பட்ட சுதந்திரமான வழிகளை கடைபிடித்து வாழ்வில் மனதை சுதந்திரமாக வைத்திருப்போம்..!!