உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு ,கோபம், ஏமாற்றம், தோல்வி மகிழ்ச்சி என்பது பொதுவான ஒரு உணர்வு தான். அது போல் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் அதை கண்ணீரின் வழியாக தான் அனைவரும் வெளிப்படுத்துகின்றனர். சிலர் தங்கள் உணர்வை கட்டுக்குள் வைத்துக்கொள்வார்கள்.
ஆனால் சிலர் எந்த ஒரு நிகழ்வையும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனே அவர் அதனை கடந்து செல்லவும் முடியாது. இவர்கள் அதிக அளவில் எமோஷனல் நபராக இருப்பார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருப்பார்கள். அவர்களை அழுமூஞ்சி என்று பலர் கிண்டலும் செய்திருப்போம், அழுவது கோழைத்தனம் என்று கருதப்பட்டாலும் அவை மனவலிக்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது என்பது தான் ஒரு மறக்க முடியாத உண்மை. தினமும் குறைந்தது இரண்டு நிமிடங்கள் அழுதால் மன அழுத்தம் நீங்கும் என்று ஆய்வு கூறுகின்றது.
அழுவதினால் தற்கொலை எண்ணம் முழுவதுமாய் நீங்குகிறது. கண்ணீர் விட்டு அழும் பொழுது கண்ணீரில் வறட்சி நீங்கி கண்களுக்கு தேவையான ஈரம் கிடைக்கின்றது. சிலர் அழும்பொழுது மூக்கில் இருந்தும் நீர் வடியும். இதனால் மூக்கு ஓட்டை கொள் தேங்கி கிடந்த அழுக்குகள், தூசிகள் போன்றவை வெளியேறிவிடும்,அழும் பொழுது நாம் மனதில் இருக்கின்ற வலிகள் நீங்கி ஒரு தெளிவு பிறக்க உதவுகிறது, இதனால் தான் அழுகை ஒரு மருந்தாக கருதப்படுகிறது. எனவே தாங்கிக் கொள்ள முடியாத நிகழ்வு நடந்தால் அதை கட்டுப்படுத்தாமல் உடனடியாக அழுது விடுங்கள், இல்லையென்றால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.