
மனிதர்களுக்கு பொதுவாக ஆரோக்கியமற்ற உணவு, குழப்பமான வாழ்க்கை முறை, உடல் பருமன், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. எந்தவொரு நபரும் தனது முழு வாழ்நாளில் அதிகபட்சமாக 3 முறை மாரடைப்பைப் பெறலாம் என்று பெரும்பாலான இருதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர். சுவாச பிரச்சனை, மிகுந்த வியர்வை, நெஞ்சு வலி, மயக்கம், அமைதியற்ற உணர்வு, வெர்டிகோ, தாடை அல்லது பல் வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறிகள். மாரடைப்பைத் தவிர்க்க, ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுங்கள், அதே போல் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.முடிந்த வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.