
பணிவு என்னும் சொல்லின் அடிப்படையில் வந்தது மரியாதை மதிக்க வாழ்வது மரியாதை : மாறாக வாழ்வது அவமரியாதையாகும் எப்படி ஒரு வார்த்தை பாருங்கள்…
எல்லோரிடத்தும் பணிவுடன் நடந்து கொள்வதால் நன்மையே பெறலாம் நல்லவன் என பெயர் எடுக்கலாம் பணிவு எனப்படும் மரியாதையை எவனிடத்தில் குடி கொண்டிருக்கிறதோ அவனிடத்தில் சிறப்பாக மற்றொரு செல்வம் உள்ளது என கூறப்படுகிறது, புகழை விலை கொடுத்தாவது வாங்கி விடலாம் ஆனால் மரியாதை என்பது தானாக வரவேண்டும். நட்ட நடவு மலையிலும் புயலிலும் எப்படி ஏனும் இளம் பயிர் வளர்ந்திருந்தாலும் கதிர் வந்து முற்றிய பின்பு எவ்வாறு தலைவணங்கி இருக்கிறதோ அதைப்போல ஒருவன் தன் சிறுவயதில் எப்படி ஏதும் இருந்திருக்கலாம் பெரியவனாக வளர்ந்த பின்பு குடும்பஸ்தன் என்று பெயரெடுத்து மரியாதையாக வாழவேண்டும் அல்லது மற்றவரை பார்த்தாவது பழகிக் கொள்ள வேண்டும். எவன் ஒருவனுக்கு இந்த சமூகத்தில் மரியாதை இல்லையோ அவன் மற்றவருக்கு மரியாதை கொடுக்க மாட்டான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். எல்லோருக்கும் தெரியும் அந்த மனிதர் நல்லவர் என்று ஆனால் அவரைப் பார்த்து அவன் மிகவும் அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசுவான் ஆனால் அந்த நல்லவர் அவனை பற்றியோ அவன் பேசிய வார்த்தையை பற்றியும் சிறிது படுத்திக் கொள்ள மாட்டார் இப்போது யார் மரியாதை உள்ளவர் தன்னடக்கம் தன்னம்பிக்கை தளரா உள்ளம் இந்த மூன்றுக்கும் முதல் படிக்கட்டாக விளங்கக்கூடிய ஒன்று மரியாதை ஆகும். மரியாதை உலகத்தில் மிகப்பெரிய சொத்து பணிவும் தன்னடக்கம் இதற்கு ஈடுபடும். ஒரு பழமொழி சொல்வார்கள் ஒருவனுக்கு சுயபுத்தி இருக்கணும் அல்லது சொல் புத்தி இருக்கணும் என்று பணிவு என்ற பதத்திற்கு இந்த உலகையே கொடுத்தாலும் ஈடாகாது நீங்கள் எடுத்துக்கொண்ட காரியம் இனிதே நிறைவேறுவதற்கு மரியாதை பணிவு தன்னடக்கம் இந்த மூன்றில் தன்னம்பிக்கை தளரா உள்ளம் ஆகிய இரண்டும் இருந்தபோதும் பணிவு இல்லை என்றால் காரியம் கைகூடாது. உங்கள் காரியத்தில் நியாயம் இருக்கலாம் காரியம் சரியானதாக இருக்கலாம் பணிவு இல்லை என்றால் மேல் இடங்களுக்கு சென்றால் உங்களுக்கு அளிக்கப்படும் அந்த உரிமையும் அதிகாரமும் சற்று தாமதமாகும் என்பது மட்டும் திட்டவட்டமான உண்மை. சமூகத்தில் ஒருவருக்கு அவரவர் அம்சம் படியே வாழ்க்கை அமைகிறது அதற்காக வேண்டி நாம் செல்வந்தனாக இருக்கிறோம். பலவானாக இருக்கிறோம் படித்திருக்கிறோம். என்று எவனொருவன் மரியாதையும் பணிவு மனம் எனும் அடக்கமும் இன்றி திரிகிறானோ அவன் நீண்ட நெடிய வாழ்க்கையெனும் சாலையிலேயே திசை மாறி சென்று திக்கு தெரியாமல் திரும்பிப் பார்த்து நினைத்து பார்த்து வேதனைப்படுவான்..
எந்த செயலில் ஈடுபட போகிறோமோ அதை பற்றி நினைத்து பார்த்தல் கேட்டுப் பார்த்தல் அரிதல் செய்தல் என்ற இந்த ஐந்தினையும் ஒருங்கே பெற்று பணிவுடன் செயல்பட்டால் காரியம் வெற்றி பெறுவது உண்டு உண்மையில் ஒருவனுக்கு பணிவு இருந்தால் அவன் செல்லும் இடமெல்லாம் சிறப்பாகவே அமைகிறது..!!