மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்.!

  • தீராத காதல்.. மாறாத அன்பு.. மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்.!

மறைந்த மனைவியின் நினைவாக முதியவர் ஒருவர் தனது மனைவியின் சிலை வைத்து நினைவு தினத்தை அனுசரித்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). தொழிலதிபரான இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி ஈஸ்வரி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார்.

தனது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் நாராயணன் மட்டும் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவிக்கு அவர் சிலை வைக்க முடிவு செய்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் சிலை செய்ய பெங்களூர் தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளார்.தனது மனைவியின் நினைவு நாளுக்கு முன்பாக அதனை செய்ய கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தனது மனைவியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது வீட்டில் சிலை வைத்து அனுசரித்து நினைவு கூர்ந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் தனது வீட்டின் வாசலில் 2 லட்சம் ரூபாய் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் வைத்துள்ளார். தற்போது இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு முன்னால் முதல்வர் மாயாவதி ஆதரவு..!! எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்..!!

Read Next

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular