
கடந்த 1980 ஆம் காலத்தில் உளவியல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் கணவர்கள் வேலைக்கு செல்லும் முன்னதாக தினமும் தனது மனைவியை முத்தமிடும்போது அவர்கள் தங்கள் மனைவிகளை முத்தமிடாத கணவர்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் சராசரியாக 5 ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் முன் கணவர்கள் தங்கள் மனைவிக்கு முத்தமிடுவது நீண்ட ஆயுளைத் தவிர வேறு சில நன்மைகளையும் அவர்கள் பெறுகின்றனர் .அதாவது அலுவலகம் செல்வதற்கு முன்னதாக மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர்கள் முத்தம் கொடுக்காத கணவர்களை காட்டிலும் 20 முதல் 35% அதிக அளவில் பணம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஜெர்மனி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் தங்கள் மனைவிகளை முத்தமிட்ட 87% பணியாளர்கள் ஊதியத்தில் அதிகரிப்பு மற்றும் அலுவலகத்தில் சிறந்த பதவிகளை வகித்ததாக கண்டறியப்பட்டது. ஆய்வுகளின் அடிப்படையில் தங்கள் மனைவிகளை முத்தமிடாமல் காலையில் வீட்டை விட்டு வெளியேறும் கணவர்கள் அல்லது அவர்களை பிரிந்திருக்கும் கணவர்கள் எதிர்மறை மனப்பான்மையைக் கொண்டிருப்பார்களாம்.
அவர் தனது சுற்றுப்புறம் மற்றும் வேலை இடத்தில் அக்கறையற்றவராய் காணப்படுவார். அதேசமயம் ஒரு ஆண் தனது மனைவியை நேசிப்பதை நிறுத்திவிட்டாலும் ஆண்கள் தங்கள் மனைவிகளை பற்றி அலட்சியம் காட்டுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.