மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் சம்சுதீன் (42). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (38). சம்சுதீன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் சம்சுதீன் அரிவாளால் மனைவியை வெட்டி உள்ளார். பலத்த காயமடைந்த பாத்திமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் சம்சுதீன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார்.