மனைவிமார்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிங்க…!! படித்ததில் பிடித்தது..!!

மனைவி_மட்டும் படிங்க…யார் முதலில் பேசுவது என்று தயங்காதீர்கள்….முதலில் பேசுவது நீங்களாக ஏன் இருக்ககூடாது.?
—————————————————————-
அன்று அவர்கள் திருமண நாள்.

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன.

ஆரம்பகாலத்தில் இருந்த பரஸ்பர அன்பு குறைந்து விட்டது

எல்லாவற்றுக்கும் விவாதம்;

சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடச் சச்சரவு என வாழ்க்கை மாறித்தான் போய் விட்டது.

ராதா காத்திருந்தாள்,கணவன் ராஜாவின் வருகைக்காக.

அவன் இன்று திருமண நாள் என்பதை நினைவில் வைத்திருப்பானா?

ராதாவுக்கு நம்பிக்கை இல்லை.

இருப்பினும் ஓர் அற்ப ஆசை,அவன் பரிசோடு வந்து ஆச்சரியப்படுத்த மாட்டானா என்று!

வெளியில் மழை வேறு .

ராதா காத்திருந்தாள்

அழைப்பு மணி ஒலித்தது.

ராதா ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்……

கையில் ஒரு பரிசுப் பொட்டலத்துடன் மழையில் நனைந்த கோலத்தில் ……ராஜா!

“இனிய மண நாள் வாழ்த்துகள்,அன்பே ”

அவள் அவனை அணைத்த்க்கொண்டாள்.

மகிழ்ச்சி வெள்ளம்!

உள்ளே சென்றனர்.

அவன் தலையைத் துவட்டி விட்டாள்

மாற்று ஆடை கொடுத்தாள்

சூடான காபி தயாரித்துக் கொடுத்தாள்.

இருவரும் அந்தக்காலம் திரும்பி வந்தது போல் கொஞ்சியவாறு பேசத் துவங்கினர்.

அடுத்த அறையிலிருந்த் தொலைபேசி அலறத் தொடங்கியது.

சலிப்புடன் எழுந்தாள் ராதா…”சே!

சிவ பூஜையில் கரடி மாதிரி!இது வேற”
எடுத்தாள்.

ஆண்குரல்,

“ஹலோ! இது ராஜா அவர்களின் வீடா?”

“ஆமாம்.”

“நாங்கள் டி-1 காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம்.

ஒரு சாலை விபத்தில் ராஜா இறந்து விட்டார்.

அவர் பர்சில் இருந்த விசிடிங் கார்டிலிருந்து எண்ணைத் தெரிந்து கொண்டோம். வருந்துகிறோம் அம்மா.”

ராதாவுக்கு மயக்கம் வருவது போல் இருந்த்து!

இது எப்படி?

அடுத்த அறையில் கணவன் இருக்கிறானே!

ஒரு வேளை……..

தன்னைப் பார்க்க வரும்போது இறந்த கணவனின் ஆவி அவளைத் தேடி வந்து விட்டதோ?

மேலுலகம் செல்லுமுன் அன்புக்குரியவரைக் காண ஆவி வரும் என்று கேள்விப்பட்டி ருக்கிறாள்

அடுத்த அறைக்கு ஓடினாள்

அங்கு…..

அவன் இல்லை!

உண்மைதான்

அவன் போய் விட்டான்.

பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கியிருக்கலாமே!

என்ன செய்வேன்.?

நான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பின்றி போனதே ”

அழத் தொடங்கினாள்

அப்போது………..

கழிப்பறைக்கதவு திறந்தது…..

ராஜா வெயே வந்தான்

”ராதா! சொல்ல மறந்துட்டேன்.

இன்னிக்கு என் பர்ஸ் தொலைந்து போய் விட்டது.

நல்ல வேளை ஏடிஎம் அட்டையெல்லாம்
என் கைப்பயில் வைத்திருந்தேன்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சண்டையிட்டு பேசாதிருக்கும்
கணவன் மனைவிகள் தன்

ஈகோ வை விட்டுவிட்டு உடனே பேசி…

வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆரம்பியுங்கள்.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாது.

பிரிந்து நொந்து தனக்குதானே புலம்பி மனகசப்புடன் தனிமையில் சாவதற்கல்ல இந்த வாழ்க்கை.

 

Read Previous

சருமம் பொலிவாக இருக்க வேண்டுமா?.. அப்போ இது கண்டிப்பாக உங்களுக்கான டிப்ஸ்..!!

Read Next

வாழ்க்கையில் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular