
மனைவியின் காதலிசம்…
சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
அவள் துணி காய போட வருவதை பார்த்து கொடியை சற்று உயர்த்திக் கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்…
துணிகளை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..!
சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர் துணி ,இருந்தும் அதில் தலை துவட்டவே ஆசை…
அவளின் முந்தானை.!
உன் சட்டையை அணிந்து கொள்ளட்டுமா என்றாள் ,
அந்த சட்டைக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சம்மதித்தேன்.!!!
கோபத்தில் அவளைத் திட்டியதற்காய் ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன்,
அன்று முதல் என்னைக் கோபப்படுத்துவதையே வேலையாய் கொண்டிருக்கிறாள்..!!!
காதுகள் கூட சுவை உணருமா??…
கருவாயா என்று அவள் சொன்னது,
காதின் வழிச்சென்று ரத்தத்தில்
சர்க்கரையை ஏற்றுகிறது.!
அதிகம் பேசிவிட்ட களைப்பில்
ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்…
உறக்கம்!
கணவன் மனைவி உறவின்
ஒவ்வொரு நிமிடத்தையும்
சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்..
அன்பு பெருகும்..