ஆந்திர மாநிலத்தில் திருமணம் ஆன ஒருவர் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் விபரீத முடிவு எடுத்துள்ளார்..
ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே புதிதாக திருமணமான 4 மாதங்களை கடந்த புது மாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் கொடுமைகள் தாங்க முடியாமல் செல்பி வீடியோ எடுத்து தனது whatsapp பக்கத்தில் அனுப்பி வைத்துவிட்டு விபரீத முடிவு எடுத்துள்ளார், தனது வீடியோ பதிவில் என் மனைவியின் தொல்லை என்னால் தாங்க முடியவில்லை அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என்று வீடியோவை தனது பெற்றோருக்கு அனுப்பி வைத்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இந்த மகனின் இழப்பை தாங்காமல் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேலும் நல்லூர் காவல் நிலை அதிகாரிகள் அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியுள்ளது..!!