
கணவனை இழந்த மனைவியை விடவும்
மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்.
காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.
ஆனால்
மனைவியை இழந்த கணவன்…
தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை
தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை
நோய்படும் போது தானும் நோகும் தாயை
இழக்கிறான்.
ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?
கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.
ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் மற்றும் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.
தான் கண்ட கனவுகள் அனைத்தையும்
கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.
வீட்டின் வேலைக்காரியாக ,
சலவைக்காரியாக,
சமையல்செய்பவளாக,
கணக்குப்பிள்ளையாக
பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்…
அவள் இருக்கும் வரை
இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.
பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும்.
பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும்
கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாடலில் அருமையாக எழுதியிருப்பார்…
” காதலி அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை கோடையிலே”…
ஆம்.. மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஆடவன் உணர்கிறான்.
மனைவியை இழந்து தவிக்கும் கணவர்களையும்…
கணவர்களை இழந்து வாடும் மனைவிகளையும் தினந்தோறும் சந்திக்கிறோம்.
கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.
மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். “இன்னும் நல்லா கவனிச்சி இருக்கலாம் சார் அவள.. இப்டி சரியா பாக்காம விட்டுட்டேனே சார்”. என்று அழுது புலம்புவார்கள்.
கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மனவலிமையும் கிடைத்து விடுகிறது.
ஆனால் மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதை போன்று தான் இருக்கிறார்கள்.
தனது சுக துக்கம்
இன்ப துன்பம்
தோல்வி வெற்றி
அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும் போது ஒவ்வொரு ஆடவனும்
இறந்தே தான் விடுகிறான்.
அதற்குப்பிறகு அவனுக்கென்று எதையும் பெரிதாய் அவன் யோசிப்பதில்லை.
அவரவர் மனைவியை அவள் உயிரோடு இருக்கும் போதே முடிந்தவரை நேசிப்போம்.
அவள் இல்லாத போது அசை போடவும் புசித்து வாழவும் நினைவுகள் தேவையன்றோ …
கணவருக்கு பிடித்ததையும் குழந்தைக்கு பிடித்ததையும்
பார்த்து பார்த்து செய்வாள் கடைசி வரை தனக்கு பிடித்ததை மறந்துவிடுவாள் பெண் (தாய்)
மனைவி உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால்தான் கணவன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும் !
கூடுதலாக எதுவும் வேண்டாம் கூடவே இரு அது போதும்… இவ்வளவுதான் ஒரு ஆணின் அதிகபட்ச ஆசை.