மனைவியை கத்தியால் குத்திய கணவர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மனைவியைக் கத்தியால் குத்தியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள பூச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலுச்சாமி (55) என்பவரது மனைவி காந்தி. இந்நிலையில் கடந்த 5 -ம் தேதி பாலுச்சாமி மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலுச்சாமி காந்தியை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து, பூச்சியேந்தல் கண்மாய்ப் பகுதியில் பாலுச்சாமி சந்தேத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த இளையான்குடி போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Previous

இந்தியா – கனடா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு..!!

Read Next

சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular