மனைவியை கொன்று, உடலை கூறுபோட முயற்சித்த கணவன்..!! நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!!

தெலுங்கானா மாநிலத்திலுள்ள மேட்சல்-மல்காஜ்கிரி  மாவட்டம் பசுபள்ளி பகுதியில் வசித்து வருபவர் நாகேந்திர பாரத் ராஜா. இவரின் மனைவி மதுலதா. இத்தம்பதிகள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தம்பதிகள் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று தனது மனைவியை கொடூரமாக நாகேந்திரா கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்தவர் அதனை மறைக்க மனைவியின் உடலை துண்டு துண்டாக அறுக்க முயற்சி செய்துள்ளார். அதுவும் பலன் இல்லாத காரணத்தால் மனைவி பலியானதாக நம்ப வைக்க  கியாஸ் வெடிப்பு முயற்சிகளும்  நடத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தோல்வி அடைந்த காரணத்தால் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். பின் அக்கப் பக்கத்தினரர் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கண்காணித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் நாகேந்திராவின் அதிர்ச்சி செயல் தெரிய வந்துள்ளது. லதாவின் உடல் மீட்க பட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கூகுள் மேப் காட்டிய வழியால் கால்வாயில் பாய்ந்த கார்..!! இன்ப சுற்றுலாவில் திகில் சம்பவம்.!!

Read Next

நெடுஞ்சாலை திரைப்பட பாணியில், ஓடும் லாரியில் பட்டப்பகலில் தார்பாய் கிழித்து கொள்ளை..!! அதிர்ச்சி வீடியோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular