மனைவியை தினமும் பாராட்ட நினைத்த கணவனுக்கு ஏற்பட்ட சோகம்..!! படித்ததில் பிடித்தது..!!

மனைவியை தினமும் பாராட்ட வேண்டும் என்று ஒரு பேச்சாளர் மூச்சை பிடித்து கொண்டு அறிவுரை சொல்ல !

நம்ம குமாரு முடிவு செஞ்சுட்டான்! இனிமேல் மனைவியை எல்லா தருணங்களிலும் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில் வேலைக்கார அம்மா! அறையை பெருக்கி கொண்டு இருக்க! வேலைக்காரியை குரு குரு என்று பார்த்து கொண்டு இருந்தான்.

கிச்சனில் இருந்து வந்த மனைவி, கணவன் வேலைக்காரியை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து கோபம் கொண்டு!

கணவனை பார்த்து! ” என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க! என்று திட்ட

அதற்கு நம்ம குமாரு அடியே நம்ம வேலைக்காரி போட்டு இருக்கும் பச்சை கலர் புடவையும் அதற்கு மேட்சிங் ரவிக்கையும் நீ அணிந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து கொண்டு இருந்தேன்! என்னை போய் தப்பா நினைத்து விட்டாயே!

மனைவிக்கு இன்னும் சற்று கோபம் ஜாஸ்தியாகி! ” அட சண்டாளா! மூணு வருடத்திற்கு முன் நம்ம கல்யாண நாள் அன்று வாங்கி கொடுத்த புடவை ரவிக்கை அது, பழசாச்சு என்று வேளைக்காரிக்கு கொடுத்தேன், எத்தனை பன்க்ஷன் நான் அந்த புடவையை கட்டி வந்து இருப்பேன்! ஒரு நாளாவது ஒரு வார்த்தை நல்லா இருக்கு என்று! ஆனா வேலைக்காரி கட்டி இருக்கும் போது தான் கண் தெரியுது!

Read Previous

திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் கிடைக்கும் பயன்கள்..!!

Read Next

பெண்கள் வயதுக்கு வரும் அறிகுறிகள் யாவை..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular