நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விட்டு பிரியப்வதாக தெரிவித்துள்ளார்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடன் இருந்த திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் இவ்வளவு காலம் கடந்து வந்த திருமண பந்தத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார், இருவருக்குள்ளும் நீண்ட கால யோசனை மட்டும் பரிசீலனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் இந்த முடிவு எங்கள் சுற்றியுள்ள எல்லோருக்கும் நல்லதாக இருக்கும் என்றும் எங்களுக்கும் நல்லவிதமாகவே அமையும் என்றும் நாங்கள் எடுத்துள்ளோம் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார், மேலும் என்னை சார்ந்தவரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது நல்வாழ்வுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார், இந்த முடிவு மிக எளிதான முடிவல்ல கடினமானது இருந்தும் எங்களின் நலனுக்காகவும் எங்களைச் சார்ந்தோரின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்து உள்ளோம் என்று ஜெயம்ரவி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்..!!




