
மனைவி இல்லாத
கணவர்களுக்கு மட்டுமே தெரியும்
அவள் ஒரு போதை என்று…
அவள் தலைக்கேறுகையில்
தடம் புரள்கிறான்…
அவள் தலை தட்டுகையில்
இவன் தூக்கம் கொள்கிறான்…
அவள் பேசுகையில்
நாக்கு குழறுகிறான்…
அவள் சிரிக்கையில்
இவன் நினைவு தப்புகிறான்…
அவள் கை பிடிக்க
கால் தள்ளாடுகிறான்…
அவள் எதிர் நின்றிருக்க
இவன் தலை சாய்கிறான்…
அவள் விலையேற்ற (வருமானம்)
இவன் வியர்வை வடிக்கிறான்…
அவள் சம்மதிக்க
இவன் நடிக்கிறான்….
அவள் கண்ணோடு
இவன் வாழ்கிறான்…
அவள் கழுத்தைத் தாண்ட
இவன் வீழ்கிறான்…
அவள் கற்பனையில்
இவன் வலி மறக்கிறான்…
அவள் வழி சொல்ல
இவன் வாழ்க்கையை மறக்கிறான்..
அவளை மதிக்காமல்
இவன் குடிக்கிறான்…
இவன் குடிக்கையில்
அவள் மதியாய் மாறுகிறாள்….
இவளிருக்க இன்னொரு
போதை
எதற்கு…..மனைவி மட்டும் தான்
போதை எனக்கு.