
மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் தான் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மா மாமியார் என்ன தன்னை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் ஆனால் கணவன் பார்த்துக் கொள்வதையே மனைவி அதிகம் விரும்புவாள். அதனால் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் கண்டிப்பாக செய்யக்கூடிய பத்து விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
*முக்கியமாக இக்காலகட்டத்தில் மனைவி மனம் நோகும்படியான கடுமையான வார்த்தைகளை பாவிக்கவேண்டாம்.*பல வதமான உணவுகளை ருசிக்க இக்காலகட்டத்தில் அவள் விரும்புவாள்.. அதை முடிந்தவரை நிறைவேற்றுங்கள்..
*குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய என்ன செய்யலாம் என இருவரும் அன்பாக கலந்து ஆலோசியுங்கள்.
*இன்ன குழந்தைதான் வேண்டும் இந்த நிறத்தில் தான் வேண்டும் என கூறாதீர்கள்.. இவற்றை தீர்மானிப்பது உங்கள் மனைவி அல்ல..
*முதல் மாதம் கர்பினியிடம் மிகவும் அன்பு காட்ட வேண்டும், exp..அவள் தேவை என்ன என்று அறிந்து நிறைவு செய்ய வேண்டும்.
*அதிகம் சிரமம் கொடுக்காமல் வீட்டு வேலைகளை கணவனும் சேர்த்து உதவி செய்யணும்.*எதிர்காலம் பற்றி பயப்படுத்த
வேண்டாம். குழந்தை பிறந்தபின் நான் இன்னும் சிரமப்பட்டு உழைக்கவேண்டும் .. இந்த வருமானம் போதாது என சலிப்பாக பேசாதீர்கள்..
*அடிக்கடி அவளிடம் பேசும்போது வயிற்றை இதமாக தடவி நம்ம குழந்தை என்ன சொல்கிறது… என அன்பாக இதமாக பேசுங்கள்…*டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். முக்கியமா கல்சியம்.
*மாலையில் சிறிது நேரம் நடை
பயிற்சியும் அவசியம்…….. முடிந்த வரை அவள் கால்பிடித்து விட வேண்டும்..*அவள் தூங்கும் வரை கணவன்
தூங்க வேண்டாம்….அப்ப.. அப்ப இதமாக ஏதாவது பேசலாம் அவள் விரும்பினால்…*நல்ல மருத்துவர் நல்ல மருத்துவமனையில் பிரசவம் செய்யவேண்டும் இது ரொம்பவே முக்கியம்.