மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரின் ஆண் நண்பரை கோடரியால் 15 துண்டுகளாக வெட்டி சாக்கு பையில் கட்டி வீசி எறிந்து கணவர்..!!

மனைவியின் ஆண் நண்பரை கோடரியால் 15 துண்டுகளாக வெட்டி வீசிய கணவர்.

மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரின் ஆண் நண்பரை கொன்று கோடரியால் 15 துண்டுகளாக வெட்டி சாக்கு பையில் கட்டி வீசி எறிந்து இருக்கிறார். போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கர சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் நகரில் வசித்து வந்தவர் மீலால் பிரஜாபதி. 40 வயதான இந்த வாலிபர் ஆட்டோ ஓட்டி வந்திருக்கிறார் அதே பகுதியில் அக்ஷய்குமார் என்கிற 25 வயது இளைஞர் வசித்து வந்திருக்கிறார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் வேலை நிமித்தமாக காசியாபாத் நகரில் வசித்து வந்திருக்கிறார்.

அந்த இளைஞர் மீலால் பிரஜாபதியின் மனைவி உடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மனைவியுடன் அந்த இளைஞர் அடிக்கடி நெருங்கி பழகுவது மீலாலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது. இந்த தகராறு நடக்கும்போது மனைவியை பல நேரம் கொடூரமாக தாக்கி இருக்கிறார் மிலால். அதன் பின்னரும் கூட அக்ஷய் குமார் வழக்கம்போல் அவரின் வீட்டிற்கு வந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார். பழகி சென்ற இருக்கிறார்.

இத்தனை கண்டித்தும் அந்த இளைஞர் வந்து செல்கிறாரே என்கிற ஆத்திரத்தில் இந்த இளைஞரை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். கடந்த 19-ஆம் தேதி மீலால் மகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் மீலால் வேலைக்கு சென்றுவிட்டதால் அவரது மனைவி மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகளை அவர் கவனித்து வந்திருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மீலால் அக்ஷய் குமாரை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்ததும் அவருக்கு குளிர்பானம் கொடுத்திருக்கிறார். அதில் மயக்கம் மருந்து கலந்திருந்ததால் அதை குடித்த சில நிமிடங்களில் அந்த இளைஞர் மயங்கி கிடந்து இருக்கிறார். கோடரி எடுத்து வெட்டி அந்த இளைஞரை கொன்று விட்டு பின்னர் 15 துண்டுகளாக உடலை கொடூரமாக வெட்டி இருக்கிறார். வெட்டப்பட்ட உடல் துண்டுகளை மூன்று சாக்கு பையில் வைத்து கட்டி இருக்கிறார். அவற்றை தனது ஆட்டோவில் வைத்துக் கொண்டு போஸ்ட் ஆப் பகுதிக்கு சென்று இருக்கிறார் அங்கே மேம்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டு கிடந்த குப்பைகளில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்.

நேற்று காலையில் அந்த குப்பைகளில் கடந்த உடல் பாகங்களை நாய்கள் பிய்த்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள். போலீசார் உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்தி வந்த போது தான் அக்‌ஷய்குமார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் நடந்த விசாரணையில் மீலால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் காசியாபாத் நகர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Previous

மகாராஷ்டிரா மாநிலத்தில் கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!!

Read Next

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய போது தந்தை மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular