மனைவி மீது வைத்த காதலை அழகாக காட்டுகிறது இந்த பதிவு மட்டும் அல்ல அந்த முதியவரின் செயலும் கூட..!!

ஒரு முதியவர் தன் மனைவி மீது வைத்த காதலை அழகாக எடுத்துக்காட்டுகிறது இந்த நீங்களும் படித்துவிட்டு உங்கள் மனைவி மீது காலம் முழுவதும் காதலை மலர் போல் கொட்டுங்கள் அந்த காதலில் உங்கள் மனைவிகள் புன்னகைக்கட்டும்…..

சூஸ் சூஸ் வாங்கி தா கண்ணு. ஆசையா இருக்கு
என்ன ஜூசுங்க ஐயா வேணும்
ஆப்பிள் சூசு.
கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் “பார்ரா” என்கிறார்கள்.
சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர்.
அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன். உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார்.
பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி.
அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய். “ஐயா. அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க” என்று அழைக்க. கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார்.
அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். “ஏது” என்று அந்த அம்மா கேட்க… வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார்.
குடி இனிப்பா இருக்கு என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார்.
நான் அந்த காதலை , கண்களில் கண்ணீர் வடிந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்..

இந்த உலகில் இன்னும் கணவன்மார்கள் பலரும் மனைவியை நேசிப்பவர்களில் சிறந்தவர்களாகவே இருக்கின்றனர் அவர்கள் காதலும் வாழ்கிறது.. இது போன்ற பதிவுகள் இன்றைய தலைமுறைக்கு நல்ல எடுத்துக்காட்டாகவும் அமையும்…!!

Read Previous

குடிநீரை மாற்றி குடித்தால் சிலருக்கு சளி காய்ச்சல் சைனஸ் பிரச்சனைகள் வர காரணம் என அவசியம் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

பெண் என்பவள் ஒரு சகாப்தம் : அவளை அழகாக வர்ணித்து பாருங்கள் வழிநடத்தி பாருங்கள் உங்கள் வாழ்க்கை பேரின்பம் காணும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular