மனைவி மேல் இவ்வுளவு பாசமா..? இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் நடிகர் என்று பன்முகத்துடன் வலம் வரும் நடிகர் ஜி.வி பிரகாஷ் தனது காதலியான பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இருவரும் காதல் திருமணம் என்பதால் இன்று வரை காதலித்து திருமணம் செய்த தமிழ் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராகவும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவர்கள் தங்களது விவாகரத்து குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஜிவி பிரகாஷின் பழைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஜிவி பிரகாஷ் “நாங்கள் இருவரும் பள்ளி பருவ காலத்தில் இருந்து தற்போது வரை நாங்கள் காதலித்து வருகின்றோம். ஜூன் 27 இல் எங்களுக்கு திருமணம் நடந்தது நாங்கள் எங்கள் பாசத்தை உறுதி செய்ய மாதாம் 27ஆம் தேதி அவர் பரிசு கொடுப்பார். நான் ஏதேனும் பொருட்களை வாங்கி எதிர்பாராத விதமாக பரிசளிப்பேன். அவருக்கு பரிசுகள் பிடிக்கும்”,  என்று கூறியுள்ளார்.

இதனை நடிகர் ரஜினியின் “படையப்பா” டயலாக் உடன் இணைத்துள்ள நெட்டிசன்கள் “காதலிக்கும் போது பெற்றவர்களை மறந்து விடுவீங்க, திருமணத்திற்கு பின் காதலை மறந்துவிடாதீர்கள்”, என்ற வசனத்தை மேற்கோளிட்டு பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதுதான் செலிபிரிட்டி வாழ்க்கையா..? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

சமீப காலமாகவே தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வருவோர் எதிர்பாராத விதமாக தங்களின் துணையுடன் விவாகரத்து அறிவிப்பது வாடிக்கையாகியுள்ளது. இதற்கு காரணங்கள் கூறப்படுவதில்லை ,தெரிவதும் இல்லை எனினும் சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்ந்து வருவோர் தங்களின் குடும்பத்திற்குள் ஏற்படும் மனக்கசப்பை சரி செய்ய இயலாதது  விவகாரத்திற்கு காரணமாக அமைகிறது என்ற விவரம் தெரிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read Previous

11 வருஷம் வாழ்ந்தது போதும்…!! மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..!!

Read Next

ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம்..!! எப்போ தெரியுமா? பரவும் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular