
மன்னித்து விடு தந்தையே….
அப்பாவிற்கு மகள் எழுதுவது ✍️
பிறக்கயில் ஐயோ…..
பெண்ணா…..
என்றார் பலர்……
பெற்றோரை பார்த்து ஏளனமாக சிரித்தார் சிலர்…..
ஏன் உறவுகளே…..
இது என்ன செய்துவிட போகிறது
என்று கேலி செய்கையில்…..
அதையெல்லாம் பொருட்படுத்தாத…. தந்தை……!
அவருக்கு மட்டும் ஏனோ….
அவர் கண்களில் அவருது மகள்
வீரமங்கை……
ஒருநாளும் மனிதன் தனக்கென வாழ்ந்தது இல்லை…..
தனக்காக எதையும்…. ஏன்….
ஒரு மாற்று துணி கூட வாங்கிக்கொண்டதில்லை….
தான் பழையதை உண்டாலும்….
தன் மகள் நல்லதை… அதுவும் பெரிய இடத்திலே உன்ன வேண்டுமாம்…..
வேண்டாம் என்று….
அவள் வைத்த
மிச்ச மீதியை உண்டு….
தன் மகளுக்காகவே வாழ்ந்து…..
அவளுக்கு எது தேவை என்பதை அவள் சொல்லும் முன்பே அறிந்து….
அப்படியெல்லாம் பார்த்து பார்த்து செய்தார்…..
என்ன பயன்……
இதையெல்லாம் செய்த அவருக்கு
அவள் கணவனை மட்டும் தேர்ந்தெடுக்க
தெரியாது என்று……
அவள்…
எண்ணிவிட்டால் போல……
பட்ட பின் தான் அறிவு தெளிகிறது…
என்ன செய்வது விழுந்தது சாக்கடை என்று…..
இருந்தும் அவர் அவளை விட்டுவிடவில்லை…..
மனிதன்……
கடைசி மூச்சு உள்ளவரை…
அவளது நிலையை எண்ணியே உயிரையும் விட்டார்…..
அவளுக்கோ தந்தையை தவிர வேறு நாதி கிடையது….
ஏனென்றால்
பெற்றது இரண்டும் பெண் பிள்ளைகளே….
கடைசியில் அனைவரும் சொன்னதை போலவே செய்துவிட்டேனே….
என எண்ணி….
என்ன செய்வது….
எல்லாம் முடிந்த பிறகு….
வழி தெரியாமல்….
வாழ்க்கை காட்டும் பாதையில் பயணிக்கிறாள்….
அப்பா என்னை மன்னித்து விடு…..
என்று
கட்டி பிடித்து…
கதறிடவே ஆசைபடுகிறாள்……
இன்று……
ஆசை பட்டு என்ன செய்வது….
அம் மாபெரும் மனிதன் போனபிறகு…..
எல்லாம் முடிந்தாயிற்று…
இனி உன் தலை எழுத்து…
புத்தி இருந்தால் பிழைத்து கொள்…என்று…
முன் நடை போட்டு கொண்டு இருக்கிறாள்…
அவள் செய்த அதே தவறை யாரும் செய்யது விடாதிர்…. ஏனென்றால்
பெண்ணிற்கு உண்மையான அன்பு தந்தையை தவிர வேறு யாராலும் தந்து விட முடியாது…..
மீண்டும் கல்லறையில் சந்திக்க காத்திருக்கிறேன்…..
என் மீது கோபம் ஒன்றும் உனக்கு இல்லை அல்லவா…….
ஒரு போதும் இருக்காது எனக்கு தெரியும்……
வெகுவிரைவில் வருகிறேன் காத்திரு என்று..,.கண்ணீருடன் காகிதத்தில் எழுதி முடிக்கிறாள்….. 🥲
பெற்ற வயிறு பித்து…..
பிள்ளை வயிறு கல்லு
என்பது சரிதான் போல….. 🙏