மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த பழக்கத்திற்கு குட்பாய் சொல்லுங்க இனி உங்க வாழ்க்கை சந்தோசமா தான் இருக்கும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..

தூக்கமின்மை பிரச்சனையால் தினந்தோறும் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர் இரவு நேரத்தில் சரியான தூக்கம் இன்மையால் உடல் புத்துணர்ச்சி இழந்து சுறுசுறுப்பு தன்மை இழந்து மிகவும் மோசமாக காட்டுகிறது எனவே மோசமான தூக்க பழக்கத்திற்கு குட்பாய் சொல்லுங்க..

தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள் நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் என்ற வாக்கில் தாகம் எடுக்கும் பட்சத்தில் தண்ணீரை குடித்துக் கொண்டே இருங்கள் இது உங்கள் உடலில் நீரேற்ற நிலையை ஆரோக்கியமாக வைப்பதுடன் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் மேலும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்..

நீண்ட நேரம் தூங்குவதற்கு உங்களை அனுமதிக்காதீர்கள் அது உங்களை சோம்பேறித்தனத்தில் மூழ்கிவிடும் எனவே சரியான நேரத்தில் தூங்குவது உங்கள் உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும் மேலும் காலை உறக்கம் உடலுக்கு கேடு..

நாள் முழுவதும் சோர்வாக இருப்பதை தவிர்த்து தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ரத்த நாளங்கள் புத்துணர்ச்சி அடையும்..

காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே காலை உணவை கடைபிடிப்பது அவசியம் மேலும் காலை உணவு பழம் கீரை வகைகள் என்றால் இன்னும் உங்கள் உடலை புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

தூய்மையான ஆடை மற்றும் தினமும் குளிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் சுத்தமின்மை உங்கள் மன அழுத்தத்தை தூண்டும் எனவே ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்ற கணக்கில் குளிப்பது உங்கள் உடலை மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்வாக வைத்திருக்கும்..

அதிக நேரம் சமூக ஊடகத்தில் நேரம் செலவிடுபவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே உங்களது நேரத்தை புத்தகம் படிப்பதில் பிடித்தவருடன் பேசுவதில் அல்லது உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் அன்றைய நாளை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்..!!

Read Previous

வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொண்டால் வெற்றியை அடைந்து விடலாம் ; வெற்றி உங்கள் அருகில் தான் உள்ளது..!!

Read Next

கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் : வித்தியாசமாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular