மன அழுத்தமா?.. மனதை அழுத்தும்போது என்ன விளைவு உண்டாகும்?.. நீங்க என்ன செய்ய வேண்டும்?..

மன அழுத்தம் என்றால் என்ன…
மன அழுத்தம் என்பது நம் மனதில் எழும் எண்ணங்களையும், செயல்களையும் வெளிப்படுத்தாமல் அடக்கி வைப்பது. நம்மால் வெளிப்படுத்த முடியாத எண்ணங்கள் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுதான் மன அழுத்தம். இப்படி எண்ணங்கள் அதிகரித்து மனதை அழுத்தும்போது என்ன விளைவு உண்டாகும் தெரியுமா?
வாங்க பார்ப்போம்.
நம் மனதில் எண்ணங்களையும், சிந்தனைகளையும்ம் வெளிப்படுத்தாமல் இருக்கும் போது நம் உடம்பில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும். ஹார்மோன் செல்களின் அதிகரிப்பால் உயர் இரத்தம்  அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற நோய்கள் உண்டாக்கும். ஏன்.. இதயம் நோய்கள் கூட ஏற்படலாம். இதன் விளைவால் சில சமயங்களில் மரணம் சம்பவிக்கவும் நேரிடும்.
இப்போதெல்லாம் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை “ஏம்மா என்னை இப்படி டென்ஷன் படுத்துற” என்பதுதான்.. ஏன் இப்படி சொல்கிறார்கள்..? நம் மனதில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் எண்ணங்கள் நிறைவேறவில்லை என்றாலும் அது ஆழ்மனதில் தேங்க ஆரம்பிக்கிறது. இதனால் சின்ன சின்ன விஷயத்தில் கூட கோபத்தையும், எரிச்சலையும் அது வெளிப்படுத்தும்.
கோபம், இயலாமை, செய்ய முடியாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றம், நினைத்தது நடக்காததால் ஏற்படும் கவலை, நம்மை யாரும் சரியாக அங்கீகரிக்கவில்லையே என்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, நம்மை கேலி செய்கிறார்களே, நம்மைக் கைவிட்டு விட்டார்களே, ஒதுக்குகிறார்களே என்று நினைக்கும்போது வரும் புழுக்கம்.. ஒரு மனிதனை நாளடைவில் மன உளைச்சலால் மன அழுத்தத்துக்கு கொண்டு சென்று விடுகிறது
சரி.. மன அழுத்தம் நீங்க என்ன செய்ய வேண்டும்? 
சிந்தனைகளை திசை திருப்ப வேண்டும்.
காலை எழுந்தவுடன் 20 நிமிடம் யோகா, உடற்பயிற்சி, தியானம், மூச்சு பயிற்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இதனால் மனம் அமைதி பெறும். மனதில் வேறு எந்த சிந்தனையும் தோன்றாது.
நம் மனதில் ஏற்படும் சந்தேகங்களையும் ,  கவலைகளையும், நமக்கு பிடித்தவர்கள்  அல்லது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.
நம் எண்ணங்களை மாற்ற மனதை வருட கூடிய இனிமையான இசையை அனுபவிக்க வேண்டும்.
மன உளைச்சலுக்கு சிரிப்பே அருமருந்து .. ஏன்… மன அழுத்தம் உள்ளவர்களுக்கு “கார்ட்டிசாஸ் ஹார்மோன்” சுரப்பு அதிகரிக்கும். வயிறு குலுங்க குலுங்க சிரித்தால் கார்ட்சாஸ் ஹார்மோன் குறைய தொடங்கும். அப்படி குறைந்தால் மூளையை தூண்டும் என்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பால் மன அழுத்தம் குறைய தொடங்கும். இது அறிவியல் உண்மை. நம் முன்னோர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். என்ன தெரியுமா …வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது தான்.
ஜாலியான  சினிமா பார்க்கலாம்..  சமூக வலைத்தளங்களில் உள்ள நல்லதைப் பார்க்கலாம்.. நம்மை ரிலாக்ஸ் ஆக்க பொழுதுபோக்கு சாதனங்கள் நமக்கு உதவும். இதில் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.
நண்பர்களுடன் அடிக்கடி கலந்துரையாடலாம் . 
எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியாக மட்டும் இருக்காதீர்கள்.. ஏதாவது செய்து கொண்டே இருங்கள்.. உங்களைக லேசாக வைத்துக் கொள்வது அவசியம். எதுவும் சரிப்பட்டு வராவிட்டால்,  மனநல மருத்துவரை அணுக வேண்டும்.  அவர் உங்களுக்கு உரிய வழிகளைக் காட்டு உங்களை இயல்பாக்குவார். மன நல ஆலோசனைகள் உங்களுக்கு வெகுவாக கை கொடுக்கும்.
பிரச்சினை வந்தால் கூடவே தீர்வும் பிறந்தே இருக்கும்.. எனவே எதையும் எளிதாக வெல்லமுடியும்.. தைரியமும், நம்பிக்கையும் மட்டுமே இருந்தால் போதும். மன அழுத்தத்தை, மன உளைச்சலை, எளிதாக வெல்லலாம்.

Read Previous

மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்..!! லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்..!!

Read Next

அட்டகாசமான சுவையில் துவரம்பருப்பு, தக்காளி சூப் செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular