மன அழுத்தம் ஏற்பட்டால் பெற்றோருடன் உரையாடுங்கள் மாணவர்களுக்கு அறிவுரை..!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன் தனது சிறுவயது போராட்டங்களை மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார் அந்த வரிசையில் இந்த ஆண்டும் கடந்த பத்தாம் தேதி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதேநேரம் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன அதன் படி உள்ளரங்கில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை இந்த ஆண்டு பூங்கா ஒன்றில் பிரதமர் மோடி நடத்தினார், இதைப் போல பிரதமர் மோடி மட்டுமே மாணவர்களுடன் கலந்துரையாடி வந்த நிலையில் இந்த முறை பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன் தனது சிறு வயது போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்…

போட்டிகளும் ஒப்பிடுதலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கிறேன் போட்டி ஒன்றும் மோசமானது கிடையாது மாறாக நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டு பலத்தை அதிகரிக்கவும் பலவீனத்தை மாற்றவும் உதவுகிறது எனவே போட்டியாளரிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அவர்களை விட வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதை பாருங்கள். மன அழுத்தம் கண்ணுக்கு புலப்படாது ஒரு காலத்தில் நான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருந்தேன். 2014 ஆம் ஆண்டு ஒரு நாள் மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது பெங்களூரில் இருந்து என்னை பார்ப்பதற்காக மும்பைக்கு வந்த எனது அம்மா நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்துவிட்டால் எனக்கு ஏதாவது நடந்ததா என அவர் கேட்டார் ஆனால் நான் அப்படி எதுவும் இல்லை அது என்னவென்று எனக்கு தெரியவில்லை நான் முற்றிலும் ஆதரவற்றவளாகவும் தன்னம்பிக்கை அற்றவளாகவும் உணர்கிறேன் எனக்கு இனி வாழ விருப்பமில்லை என்று கூறினேன். அப்போது எனது நிலை உணர்ந்து கொண்ட எண் அம்மா ஒரு மனநல மருத்துவர் அழைக்க முடிவு செய்தார் அப்போது நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன்..

மனநலம் என்பது நம் நாட்டில் ஒரு கலங்கமாக இருந்தது இந்த நோயை பற்றி பேச ஆரம்பித்த உடன் நான் மிகவும் சுதந்திரமாகவும் லேசாகவும் உணர ஆரம்பித்தேன். அங்கிருந்து மனநல விழிப்புணர்வை நோக்கிய எனது பயணம் தொடங்கியது மனசோர்வு பதற்றம் மன அழுத்தம் யாருக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் தேர்வுக்கு முன் தினம் இரவு உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள் உங்கள் மன அழுத்தங்களை காரணத்தை கண்டறியுங்கள் அதை நம்பிக்கையான ஒருவரிடம் தெரிவியுங்கள். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

நட்பு நட்புதான் காதல் காதல்தான் காதலர் தின ஸ்பெஷல்..!!

Read Next

அடுக்குமாடி குடியிருப்பிலும் அழகாக அமைக்கலாம் சிறு தோட்டம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular