கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது, பலரும் அந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடிய நிலையில் மம்தா பானர்ஜி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்…
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடை விவகாரத்தில் பதவி விலக தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித்துள்ளார் மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும் தனக்கு முதல்வர் பதவி தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார், மக்கள் தன்னை மணிப்பார்கள் என நம்புவதாகவும் வேதனை தெரிவித்தார் மருத்துவர்கள் போராட்டம் முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார், மேலும் மக்களின் விருப்பம் நான் பதவி விலகுவது தான் என்றால் நான் மக்களுக்காக பதவி விலகுவதை மாதா ஏற்றுக் கொள்வேன் என்று மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார், இந்த பதவி மக்களால் வந்தது மக்கள் கூறும் வார்த்தை எனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார்..!!