மயிலாடுதுறையில் கொடூரம்..!! தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் மரணம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சார்ந்த ராமமூர்த்தி மகன் ஆகாஷ்.இவர் பூம்புகார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இதே போல் கடலூர் மாவட்டம் புவனகிரி சார்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா என்பவர் மயிலாடுதுறை அரசு ஞானம்பிகை மகளிர் கல்லூரியில் பிஎ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் சில நாட்களுக்கு பிறகு அது காதலா மலர்ந்தது.

இதற்கிடையே ஆகாஷ் வேறொரு பெண்ணிடம் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவது மற்றும் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த சிந்துஜா பூம்புகாரில் காதலனை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் காவேரி பாலக்கரை என்ற இடத்தில் வந்த போது சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதை பார்த்து பதறிப்போன காதலன் ஆகாஷ் சிந்துஜாவை காப்பாற்ற முயன்ற போது அந்த தீ இருவர் மீது தீ பற்றி எரிய உடனே அங்கு இருந்தவர்கள் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகித்துக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிர் இழந்தார். சிந்துஜாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகாஷ் தனது மரணம் வாக்கு மூலத்தில் கொடுத்த தகவலின் படி சிந்துஜா மீது மயிலாடுதுறை காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீக்குளித்த காதலியை காப்பாற்ற சென்ற காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தடை இல்லாத வளர்ச்சி பயணம்..!! அமித்ஷா வாழ்த்து..!!

Read Next

மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததாக அர்ச்சகர் மீது பரபரப்பு புகார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular