மருத்துவ பழமொழிகள்..!! கண்டிப்பாக இதை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டும்..!!

Oplus_131072

மருத்துவ பழமொழிகள்:

1) கோழைக்கு எதிர் தூதுவளை… நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை

2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.

3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.

4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.

5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.

அசைவம்சைவம்

6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.

7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.

8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.

10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.

11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.

12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.

 

13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.

14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.

15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.

16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

17) வில்வம் பித்தம் தீர்க்கும்.

18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .

 

19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.

இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்… படித்தால் மட்டும் போதாது பயன்படுத்தி பலன் பெறுங்கள் , மூலிகைவளம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று…

 

Read Previous

வெங்காய வடை இப்படி செஞ்சு அசத்துங்க..!!

Read Next

அப்பாவுடன் நீங்கள் ஒரு முறை மட்டுமே வாழ்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular