மருமகன் இறந்த செய்தி அறிந்து மாமியார் மாரடைப்பால் மரணம்..!! போலீசார் விசாரணை..!!
திண்டுக்கல் மாவட்டம் சேர்ந்தவர் அருண்குமார்(24). இவர், 10 மாதங்களுக்கு முன் சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நாகம்மாள் அவரது தாய் வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில் தினமும் இரவு மனைவியை பார்க்க செல்வது போன்று சென்ற அருண்குமார் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவலை அறிந்த அவரது மாமியார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.