பொதுவாகவே நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பூஜை சம்பந்தமான பழக்கவழக்கங்கள் பாரம்பரியமாக பின்பற்றப்பட்ட வருகிறது. நவீன காலகட்டத்தில் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் மாறினாலும் வெள்ளிக்கிழமை அன்று இதையெல்லாம் செய்யலாம் இதை எல்லாம் செய்யக்கூடாது என்ற பழக்கவழக்கங்கள் இன்னும் அனைவரும் வீட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பது தான் உண்மை. இந்நிலையில் ஒரு சிலருக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாமல் கூட இருக்கலாம். அவர்களுக்கான பதிவு தான் இது. வெள்ளிக்கிழமை அன்று ஒரு சிலவற்றையெல்லாம் ஒருபோதும் செய்யக்கூடாது அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை என்பது புனிதமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று அசைவ உணவுகள் சாப்பிட மாட்டார்கள். வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கொடுக்கவும் மாட்டார்கள். மேலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று நகம் வெட்டக்கூடாது முடிவெட்டக்கூடாது என்னும் பழக்கம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பின்பற்றி வருகிறது. எனவே ஒருபோதும் இந்த தவறுகளை எல்லாம் வெள்ளிக்கிழமை அன்று செய்து விடாதீர்கள். இவற்றையெல்லாம் நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்தால் நம் குடும்பத்திற்கு நல்லதல்ல. வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் தலைக்கு குளித்து சமையல் செய்வார்கள். குறிப்பாக எந்த நாள் குளித்துவிட்டு சமையல் செய்கிறோமோ இல்லையோ வெள்ளிக்கிழமை அன்று தலையோடு நன்றாக குளித்துவிட்டு காலையிலேயே சமையலே ஆரம்பிக்க வேண்டும். பூஜை அறையும் வீட்டையும் வெள்ளிக்கிழமை அன்று தொடைக்கவோ கிளீன் பண்ணவோ கூடாது அதற்கு முன்ன நாளே அனைத்தையும் சுத்தம் செய்து அன்று நாம் பூஜை மட்டுமே செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று புதிய ஆடைகள் அணியலாம். ஆனால் புதிய ஆடைகளை துவைக்க கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் சமையல் சம்பந்தமான குறிப்பாக உப்பு போன்றவற்றை கடனாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உப்பு என்பது மகாலட்சுமியின் மறு உருவமாக கூறப்படுகிறது. வீடுகளில் எப்போதும் உப்பு நிறைந்து கொண்டே இருக்க வேண்டும் தீர்ந்து போய்விட்டது என்று கூறக்கூடாது. இதையெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் பின்பற்றுங்கள் உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகள் மற்றும் தேவையில்லாத விரைய செலவுகளை வெள்ளிக்கிழமை அன்று இதைக் கடைப்பதன் மூலமே படிப்படியாக குறைக்கலாம்.




