
நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மயில்சாமி கடந்த மகா சிவராத்திரி அன்று அதிகாலை நேரத்தில் மாரடைப்பு காரணத்தினால் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இவரின் மறைவு திரையுலகினர் பலரை பெரும் சோகத்தை ஆழ்த்தியது .இவருக்கு அருமை நாயகம், யுவன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி தங்களது மனைவியுடன் தங்களின் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் மறைந்த நடிகர் மயில் சாமியின் மருமகள்கள் இருவரும் தங்களது கணவரிடம் இருந்து விவாகரத்து கோருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இவை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. காமெடி நடிகர் மயில் சாமி இறந்து ஒரு வருடம் ஆகாத நிலையில் அவரின் குடும்பத்தில் அடுத்தடுத்த சோக சம்பவம் ஏற்படுவது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.