
Oplus_131072
மற்றவரிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்..!! இதையெல்லாம் அடுத்தவர்களிடம் ஒருபோதும் கூறி விடாதீர்கள்..!!
இந்த நவீன காலகட்டத்தில் பல துறைகள் வளர்ச்சி அடையும் பொழுதிலும். ஒரு சில விஷயங்களை எல்லாம் நாம் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை உண்டு. இந்நிலையில் மற்றவரிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்று ஒரு சில விஷயங்கள் உள்ளன. அது என்ன என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீடு மற்றும் தங்க நகை மற்றும் புதிய பொருட்கள் வாங்கி முடிக்கும் வரையிலும் பிறரிடம் ஒருபோதும் சொல்லி விடாதீர்கள். நாம் செய்யும் தான தர்மங்களை குறிப்பாக யாரிடமும் சொல்லக்கூடாது. அதுபோன்றுதான் நாம் முன்னோர்களின் காலங்களில் இருந்து பின்பற்றி வரும் ஒன்றுதான் நாம் கடவுளிடம் வைத்து விடுதலை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது.
நம் எதிர்கால திட்டங்களை ஒருபோதும் அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது. அது மட்டும் இன்றி தொழிலில் வரும் லாபத்தையும் சொல்லக்கூடாது. முன்னோர்கள் கூறிய வரை கர்ப்பமாக இருக்கும் போதும் மூன்று மாதங்கள் முடியும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது. குடும்பத்தின் வரவு செலவு கணக்கை வெளி நபர்களிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள அன்னியோன்யத்தை வெளியில் உள்ள நபர்களிடம் ஒருபோதும் கூறி விடாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு பற்றிய விவரங்களையும் வெளிநம்பர்களிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது. இதையெல்லாம் கண்டிப்பாக யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.