மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானா காத்தாடி பட இணை இயக்குனர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்கிக்கல் எழில் நகரை சார்ந்தவர் பூர்ணிமா இவருக்கு ஏற்கனவே கோவையை சார்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி சட்டப்படி விவாகரத்தை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்த லட்சுமி காந்தன் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் லட்சுமி காந்தன் தற்பொழுது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதை அறிந்த பூர்ணிமா இந்த சம்பவம் குறித்து கேட்டதற்கு லட்சுமி கார்தன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த கொலை மிரட்டல் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூர்ணிமா புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் அவர் குறிப்பிட்டிருப்பது “தன்னுடைய கணவன் லட்சுமி காந்தன் சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். பானாகாத்தாடி  உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு லட்சுமி காந்தை நான் மறுமணம் செய்து கொண்டு சென்னையில் ஐந்து ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தோம். திருவண்ணாமலையில் சொந்தமாக வீடு வங்கி செட்டில் ஆகலாம் என என் கணவர் லட்சுமிநாதன் தெரிவித்தார். தற்பொழுது நான் எனது தாய் வீட்டில் தங்கி உள்ளேன். இதற்கிடையே என்னுடைய கணவர் லட்சுமி காந்தன் சுவேதா என்கின்ற மற்றொரு பெண்ணுடன் தனியாக வசித்து வருவதாகவும், அவரை அவர் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு என்னுடைய கணவர் லட்சுமி காந்தன் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரியின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினால் லட்சுமி காந்தனை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஜூலை மாதம் வரவுள்ள குப்த நவராத்திரி..!! எப்போது தொடங்கும்..? முழு விவரம் உள்ளே..!!

Read Next

ஜூலை மாதம் இந்த நான்கு ராசிக்காரர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular