மலச்சிக்கலால் அவதிப்படுறீங்களா..? எப்படி தப்பிக்கலாம்..!!

கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வரும் கடும் வெயிலின் காரணமாக மக்கள் உடலில் நீர் இழப்பு, மலச்சிக்கல், முகங்களில் கட்டி என வெயில் சார்ந்த பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.

இதிலிருந்து தப்பிக்க நீ சார்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தேடி தேடி சாப்பிடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண நாட்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை கிலோ ஆயிரம் கணக்கில் தலைநகர் சென்னையில் விற்பனை ஆகி வருகின்றது.

அதேபோல் நுங்கு, இளநீர், மோர் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது கோடை மழை பெய்ய தொடங்கி பல மாவட்டங்களில் குளுகுளு சூழ்நிலையை ஏற்படுத்தினாலும் பலருக்கும் கோடையால் ஏற்பட்ட மலச்சிக்கல் சார்ந்த பிரச்சினை என்பது நீங்காமல் உள்ளது .

இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணியாக நார்சத்து குறைபாடு, நீர் இழப்பு, மன அழுத்தம், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவை கூறப்படுகிறது. மலச்சிக்கலை  சரியாக முதலில் போதுமான அளவு நீர் குடிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆப்பிள், பேரிக்காய், முழு அளவிலான தானியங்கள், காய்கறிகள், கீரைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, அத்திப்பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார் சத்து மலத்தை இளக்கி அதனை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

Read Previous

மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புத உணவுகள்..!! என்னென்ன தெரியுமா..?

Read Next

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்க.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular