
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் எப்போதுமே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துக்கொண்டு அடிக்கடி பருகி வரவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் அதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…
மலச்சிக்கல் பிரச்சனை தீர சிறந்த உணவுகள் குறித்து மருத்துவர்கள் கூறுகின்றனர். இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மது சூதனன் கூறியுள்ளார்..
மலச்சிக்கல் தீர நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து அனைவரும் புரிந்து வைத்திருக்க வேண்டும் அதில் நார்ச்சத்து இல்லாத உணவுகளை தவிர்க்க வேண்டும் குறிப்பாக பீட்சா பர்கர் விரைவு உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சிப்ஸ் போன்ற பேக்கரி தின்பண்டங்களை மைதா சேர்க்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எப்போதுமே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொண்டு அடிக்கடி பருகி வர வேண்டும் உங்கள் குழந்தைகளுக்கும் அதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இருக்கிறது அரிசி கோதுமை சிவப்பரிசி போன்றவற்றில் தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வரலாம் அதேபோல் சிறுதானியத்தில் தயார் செய்யப்படும் உணவுகளை அன்றாட சாப்பிட்டு வரலாம். ராஜ்மா வெள்ளை கொண்டைக்கடலை பட்டாணி போன்றவைகளையும் சாப்பிடலாம். பழங்களில் கொய்யாப்பழம் ஆப்பில் ஆரஞ்சு சாப்பிடலாம் பேரிக்காய் எப்போதுமே கிடைத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டும் உலர்ந்த பழங்களில் கிசுமுசு பேரிச்சை பழம் போன்றவைகளை சாப்பிடலாம். காய்கறிகளிலும் நிறைய நார்ச்சத்து இருக்கிறது முருங்கைக்காய் கேரட், பச்சை பட்டாணி சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவைகளை அன்றாட சாப்பிட்டு வரலாம் கடலைகளை பொறுத்தவரையில் வேர்க்கடலை பாதாம் போன்ற நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்..!!