
மலச்சிக்கல் பிரச்சனை பற்றி நாம் அனைவரும் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஏன் பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதி கூடப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் மலச்சிக்கல் எதனால் வருகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
மலச்சிக்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணமாக இருப்பது குடல் வறட்சி.
நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் குறையும்
மூலம் உள்ளவர்களுக்கும், உடல்சூடு காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம்.
குடலில் வாழும் சில நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் (பாக்டீரியாக்கள்) மலம் வெளியேறுவதில் முக்கிய பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. மலமாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்று அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதாவது மலப்பிரச்சினை இல்லாத ஒருவரின் மலக்குடலில் இருந்து சிறிது மலத்தை எடுத்து மலப்பிரச்சினை உள்ளவரின் மலக்குடலில் வைப்பதன்மூலம் மலப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
அபான வாயு மலத்தை வெளியேற்ற உதவுகிறது இந்த அபானவாயு காலை 6.00 (<6.30) மணிக்கு முன்னர் எழும்போது நன்கு வேலை செய்யும்
மலச்சிக்களுக்கு அபான முத்திரை நல்ல பலன்தரும் என்று நம்பப்படுகிறது அதாவது கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இது அபான முத்திரை
திறந்த வெளியில் ஜன்னல் கதவுகளை திறந்துவைத்து உறங்குபவர்களுக்கு மலச்சிக்கல் அரிதாகவே இருக்கும்.
கடுக்காய்ப்பொடி குடல் வரட்சியை நீக்கி மலம் இலகுவாக வெளியேற உதவும். (20 நாட்களுக்குப் பிறகு நல்ல பலன் தெரியும் )
வர்மமுறையில் நெற்றியில் உள்ள ஒரு வர்மப் புள்ளியையும், மூக்கில் உள்ள ஒரு வர்மப் புள்ளியையும் இயக்குவதன்மூலம் மலச்சிக்கல் சிகிச்சை தரப்படுகிறது.
விளக்கெண்ணை பருகுதல் மூலமாக மலக்கட்டு நீக்கப்படுகிறது.
பொதுவாக பழங்கள் மலப்பிரச்சினையை தீர்ப்பதில் வல்லவை.