தேவையான பொருள்: வாழை பூ தேவையான அளவு துவரம் பருப்பு 100 கிராம் கடலை பருப்பு 4 ஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கடுகு வெந்தயம் தாளிக்க சம்பார்த்துள் 2 ஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை: வாழைப்பூ ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். துவரம் கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து பிசைந்து இட்லீ பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சம்பார்த்துள் சிறிது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மற்றறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும் சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி.