
மலரை தேடும் வண்டின்
கூட்டத்திற்கிடையே
வண்டை தேடும் மலராய் நான்…
மனம் வருடும் வண்டினை
தேடி நிற்கிறேன்
கள்ள உறவுக்கான
காத்திருத்தலேயானாலும்
நம்பகத்தன்மை
நிறைந்த ஆடவனுக்காய்
ஆவலாய் நான்
என் உரையாடலையும்
எடுத்துரைக்கும்
உணர்வுகளையும்
பிறரோடு பகிராது
தனக்கான உணவென
தான் மட்டுமே உண்ணும்
சுயநலவாதியை
தேடி நிற்கிறேன்
ஓரிரு முறை கூடலுக்குபின்
பிரிவென்று ஓன்று
வரும் தருணத்திலும்
பிரிய மனமில்லை என்று
பொய்யுரைத்து
என் பிம்பங்களை
தவறாய் பரப்பாது
அவன் மீதுள்ள ஆசையில்
ஆடை அவிழ்த்தெறிந்து
அவனுக்கென
நான் பகிறும்
என் உடலழகை
ஊரார் கண்ணுக்கு
விருந்து வைக்காது
பிரிவிலும் உண்மையாய்
இருக்கும்
பேராண்மை கொண்டவனை
தேடி திரிகிறேன்
திரும்பும் திசையெங்கும்
வண்டுகளிருந்தாலும்
நான் தேடும்
பொன்வண்டது
எனை நாடாமலே
நாட்கள் கழிகிறதே
பருவமது பாதி உதிர்ந்தபடி
வண்டை தேடும்
மலராய் நான்..
படித்ததில் மிகவும் பிடித்த வரிகள்..!! உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்..!! படித்திருந்தால் பகிருங்கள்..!!