
தமிழகத்தில் மலை மாவட்டங்களை மழை நேரத்தின்போது தொடர் கண்காணிப்பில் ஈடுபட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு:
கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலை மாவட்டங்களை கண்காணிப்பதன் மூலம் பேரழிவுகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை மழை நேரத்தின்போது தொடர் கண்காணிப்பில் ஈடுபட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.