மழைக்காலத்தில் உடலை பாதுகாக்கும் துளசியின் தூய்மையான நன்மைகள்.!!

வயல்வெளிகள் மற்றும் கொல்லைப்புறங்களில் எளிதாக கிடைக்கும் மூலிகை செடி துளசி. தினமும் துளசியை சாப்பிடுவதால் சுவாசக் கோளாறுகள் தடுக்கின்றது. மேலும் துளசி இலை சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தடுத்து அழகான சருமத்தை கொடுப்பதற்கு பயன்படுகின்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சிறிது சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு, வயிற்று பிரச்சனைகள், சளி, தலைவலி, இருமல் ஆகிய பிரச்சனைகள் நீங்கும். அந்த வகையில் தினமும் துளசி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

தற்போதையுள்ள காலகட்டத்தில் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல் வருகிறது. இதற்கு நாம் மாத்திரை, மருந்துகளை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் அதற்கு மாற்றாக இயற்கை மூலிகை பயன்பாட்டால் உடலில் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு விரைவில் குணமடையும். அதன்படி காய்ச்சல் இருந்தால் தொடர்ந்து துளசி சாப்பிடுவதால் காய்ச்சல் குணமடையும்.

அதேபோல் தலைவலி, இருமல், சளி போன்ற தொந்தரவு இருந்தால் உடனடியாக துளசி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். துளசி இலைகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஏனென்றால் துளசியில் உள்ள அமிலங்கள் நுரையீரலை பாதுகாத்து சீராக சுவாசிக்க உதவி புரிகிறது. மேலும் துளசியில் உள்ள கிருமி நாசினி பண்புகள் பல்வேறு வைரஸ் தோற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் துளசி சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துஉடலை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது.

Read Previous

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா..? இந்த காயை உணவில் சேர்த்தால் போதும்.!!

Read Next

“அஜித்திற்கு ஜோடியாக நான் தான் நடிப்பேன்” அடம்பிடித்த நடிகை மீனா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular