மழைக்காலத்தில் செய்ய சூப்பரான ஸ்நாக்ஸ்..!! வெறும் 10 நிமிடத்தில் நெல்லூர் போண்டா ரெடி..!!

பொதுவாக இந்த மழைக்காலங்களில் அனைவரும் சூடான ஸ்நாக்ஸையே சாப்பிட விரும்புவார்கள். அதிலும், ஈஸியான செய்முறையில், குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் என்றால் அதை அடிக்கடி செய்வது வழக்கம். அந்த வகையில் மிகவும் ஈஸியான செய்முறையில் வெறும் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய நெல்லூர் போண்டாவை எப்படி செய்யலாம் என்ற செய்முறையை கீழே விரிவாக காணலாம்.

அதாவது, இந்த நெல்லூர் போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கால் கப் கடலை பருப்பை 1 மணி நேரத்திற்கு ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஊறவைத்த கடலை பருப்பை இட்லி மாவில் கலக்க வேண்டும். அதனுடன், பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறகு சூடான எண்ணெயில் தயார் செய்து வைத்துள்ள போண்டா மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான நெல்லூர் போண்டா தயார்.

Read Previous

ரூ.47,600/- சம்பளத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

VIDEO: மண்சரிவில் உயிரிழந்த உரிமையாளரை தேடும் நாய்..!! வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular