மழைக்காலத்தில் மிரட்டும் கொசுக்களை விரட்ட டிப்ஸ் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!!

மழைக்காலத்தில் கொசு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம் கொசுவை விரட்ட இதோ உங்களுக்கான டிப்ஸ்…

மழைக்காலத்தில் கொசு இல்லாத வீட்டை பெறுவது ஒரு கனவு போன்றது இரவு வந்தாலே நம்மில் பலர் கொசுவை விரட்ட கொசுவர்த்தி சுருக்கள் ஸ்பிரே திரவங்களை தேட துவங்கி விடுவோம் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ரசாயனங்கள் நிறைந்துள்ளன சுவாசிப்பதில் சிரமத்தை உருவாக்குவது உட்பட கண் எரிச்சல் போன்ற பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை அகற்றுவதற்கான வழிகள் குறித்து இப்போது பார்க்கலாம், சூரியன் மறையும் போது கதவு ஜன்னல்களை மூடுங்கள். கதவு ஜன்னலை மூட விரும்பாதவர்கள் கண்டிப்பாக கதவு ஜன்னல்களுக்கு கொசுவலைகளை இணைத்து விடுங்கள், ஏசியில் வெளிவரும் நீர் அல்லது தோட்டத்தில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யப்படும் அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சாமந்தி துளசி லெமன் கிராஸ் சிற்றோனெல்லா புதினா போன்ற சில வகை செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை ஈசியாக விரட்டலாம் மேலும் கொசுவை விரட்ட கிராம்புகளுடன் எலுமிச்சையை பயன்படுத்தலாம் கிராம மற்றும் சிட்ரஸ் வாஷனை கொசுக்களை வெளியேற உதவும் மேலும் சில பூண்டு பற்களை நசுக்கி அதை தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும் அந்த நீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வீட்டை சுற்றி தெளிக்கவும் கொசுவை எளிதாக விரட்ட முடியும்..!!

Read Previous

பற்களை பிடுங்காமல் பல்சொத்தைக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா? இதோ உங்களுக்கான பதிவு..!!

Read Next

கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை போக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular