மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்?.. ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க..!!

 

மழைக்காலம் வந்துவிட்டால் காடுகளில் சுற்றத்திரியும் பாம்புகள், பூச்சிகள் மற்றும் தவளைகள் வீட்டிற்குள் வர வாய்ப்பு உள்ளது.

 

 

 

தண்ணீர் குறைந்து, துளைகள் அழிக்கப்படுவதால், பாம்புகள் புதிய இடங்களைத் தேடி அதிக எண்ணிக்கையில் வெளியில் வரும்.

ஈரப்பதம் மற்றும் குளிர் காரணமாக அவை சூடான மற்றும் வறண்ட தங்குமிடத்தை தேடி மனிதர்கள் வாழும் வீடுகளுக்கு நுழைந்து விடுகிறது.

நாம் பாதுகாப்பிற்காக அதனை தாக்க முயற்சித்தால், அதுவும் அதே பாதுகாப்பிற்காக நம்மை தாக்கி, மரணத்தை உண்டு பண்ணும். அதே போன்று குழந்தைகள் உள்ள வீடுகள் என்றால் அவர்கள் பாம்புகளுடன் விளையாடவும் செய்கிறார்கள்.

 

அந்த வகையில், பாம்புகள் மழைக்காலங்களில் வீட்டுக்கு வராமல் செய்வதற்கு என்னென்ன நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

 பாம்புகளை விரட்டியடிக்க டிப்ஸ்

 

 

1. சிலர் வீடுகளில் தேவையில்லாத பொருட்களை அதிகமாக சேர்த்து வைத்திருப்பார்கள். பாம்புகளுக்கு எந்த மறைவிடங்களையும் உருவாக்காமல் இருக்க வேண்டும். நன்றாக வளர்ந்த புல் மற்றும் தாவரங்களை வெட்டி நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும்.

2. கதவுகள், வெளிப்புறச் சுவர்கள் மற்றும் அடித்தளங்களில் விரிசல்கள் அல்லது இடைவெளிகள் இருப்பின் மழைக்காலம் வருவதற்கு முன்னர் அடைத்து விடவும். பாம்புகளுக்கு கடுமையான வாசனைகளை தாங்க முடியாது. இதனால் பூண்டு மற்றும் சிவப்பு வெங்காயம் ஆகியவற்றை நசுக்கி தண்ணீருடன் கலந்து இது போன்ற இடங்களுக்கு ஊற்றி விடவும். தோட்டங்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு தெளித்தும் வைக்கலாம்.

 

 

3. கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை சம அளவு தண்ணீருடன் கலந்து தெளித்து விட்டால் பாம்புகள் வராமல் பாதுகாக்கலாம்.

4. பாம்புகளை விரட்ட வேப்ப எண்ணெய் மற்றும் கற்பூர கலவை தயாரித்து வீடுகளில் வைக்கலாம். சிறிது வேப்ப எண்ணெய்+ தண்ணீர் சூடாக்கி தெளித்து வந்தால் பாம்புகள் வராமல் கட்டுக்குள் வைக்கலாம்.

 

 

5. பொடித்த புகையிலை மற்றும் சுண்ணாம்புப் பொடி இரண்டையும் சம அளவில் கலந்து வீட்டை சுற்றி தெளிக்கவும். அத்துடன் விரிசல் விழுந்த இடங்களில் அதிகமாக தெளிக்கவம். கடை அறைகள் மற்றும் மாடிகளின் மூலைகளில் நாப்தலீன் துகள்கள் அல்லது கற்பூரம் வைக்கலாம். அதிலுள்ள வாசனை பாம்புகளை வீட்டிற்குள் வரவிடாது.

Read Previous

விடாபிடியான பாத்ரூம் கறை அசிங்கமா இருக்கா?.. அப்போ இந்த திரவம் ஊற்றுங்க- பளபளக்கும்..!!

Read Next

நீங்கள் தொலைபேசியை பிடிக்கும் முறை வைத்து உங்களை பற்றி கூறலாம்- நீங்கள் எப்படி??..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular