மழைக்கால நோய் தொற்றுகளை விரட்ட இந்த பானங்கள் மட்டுமே சிறந்தது..!!

மழைக்கால நோய் தொற்றுகளை விரட்ட இந்த பானங்கள் சிறந்ததாக அமையும்…

ஆப்பிள் சைடர் வினிகர் இந்த வானத்தை தயாரிக்க பட்டை பொடி ஜாதிக்காய் பொடி மற்றும் துருவிய ஆப்பிள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு வடிகட்டி இதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்த மிதமான சூட்டில் பருக வேண்டும், உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்களை வழங்கி உங்களுக்கு இதமான மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் பானமாகும் குறிப்பாக இந்த குளு குளு குளிர் காலத்துக்கு மிகவும் ஏற்றது..

கிவி ஸ்மூத்தி : கிவி பழம் யோகர்ட் இரண்டையும் கடையில் இருந்து வாங்கிக் கொண்டு அதை ஸ்மூத்தியாக தயாரித்துப் பார்க்க வேண்டும், அதில் ஆரோக்கியமான அளவு வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் இது உங்களுக்கு புத்துணர்வையும் தரும் பானம்..

இஞ்சி மஞ்சள் தேநீர் – இஞ்சியை இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட்டு அதில் மஞ்சள் தூள் கலந்து வடிகட்டி பருக வேண்டும் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து பருகலாம் அல்லது அப்படியேவும் பருகலாம் இது வீக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது இதிலுள்ள வைட்டமின் சி சத்துக்கள் சளி தொற்றுகளை போக்குகிறது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது…

கிரீன் ஸ்மூத்தி : பாலக்கீர் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்து இந்த ஸ்மூர்த்தி தயாரிக்கப்படுகிறது இதில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்துகிறது..

பீட்ரூட் மட்டும் கேரட் வைத்து தயாரிக்கப்படும் இந்த சாறு உங்களுக்கு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்களை கொடுக்கிறது இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது குளிர்காலத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது..

மணத்தக்காளி பல தேநீர் -மணத்தக்காளி பழத்தில் நோய் எதிர்ப்பாற்றல் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது இதை காய வைத்து சூடான தண்ணீரில் கலந்து பருக வேண்டும் இது சளியும் தீவிரத்தை குறைக்கும் என்று கூறுகின்றனர்..!!

Read Previous

வாய்விட்டு சிரிக்க இத்தனை ஜோக்குகளா : கொஞ்சம் படிச்சு தான் பாருங்க..!!

Read Next

பாதாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular