
- மாங்காய் சொதி
தேவையான பொருட்கள் :
மாங்காய் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 கொத்து
தேவையான அளவு உப்பு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – 1/4 கப் (முதற்பால்)
தேங்காய்ப் பால் – 1 கப் (இரண்டாம் பால்)
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் இரண்டாம் தேங்காய்ப் பாலில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு இவை அனைத்தையும், வெட்டிய மாங்காயுடன் சேர்த்து அவிய விடவும். மாங்காய் வெந்தவுடன் அதனுள் முதல் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.