பொதுவாகவே அனைவரது வீட்டிலும் இறைவனது புகைப்படங்களை வைத்து வழிப்படுவது வழக்கம். அதிலும் தங்களது பிடித்து கடவுளின் படங்களை அதிகமாக வைத்து வழிபாடுவார்கள்.
ஆனால் ஒரு சிலர் உக்கிரமான தோற்றத்துடன் இருக்கும் கடவுளின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதற்கு சற்று தயங்குவதும் உண்டு.
அந்தவகையில் பலராலும் அதிகமாக யோசிக்கப்படுவது மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா என்பது தான். எனவே அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா?
சிலருக்கு மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கும்.
சிலர் மாசாணி அம்மளை விரும்பி வணங்குபவராக இருந்தாலும் வீட்டில் படத்தை வைப்பதற்கு சற்று யோசிப்பார்கள். காரணம் மாசாணி அம்மன் என்ற தெய்வம் உக்கிரமான தெய்வம் ஆகும். ஆகவே வீட்டில் வைப்பதற்கு பயம் இருக்கும்.
ஆனால் எந்தவொரு கடவுள் படமாக இருந்தாலும் நீங்கள் 1 அடிக்கு மேலாக இருந்தாலு தோஷம் இருக்கும். சிறிய படமாக இருந்தால் அந்த பயம் இருக்க தேவையில்லை.
ஒரு அடிக்கும் மேலாக இருக்கும் படத்திற்கும் சிலைக்கும் தகுந்த அளிவிற்கு நெய் வேதியம் வைத்து வழிப்பட வேண்டும்.
மாசாணி அம்மனை படத்தை சின்னதாக வைத்து வழிப்படலாம். இதனால் எந்தவொரு தோஷமும் ஏற்படுவதில்லை.
ஆனால் பூஜை அறை தனியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் மஞ்சள் தண்ணீர் அல்லது சர்க்கரை பொங்கல், வேப்பிலை நெய் வேதியம் வைத்து வழிப்படலாம்.
மேலும் சுத்தமான பசும் பால் வைத்து வழிப்படுவதும் சிறந்த பலனை தரும்.