மத்தியப்பிரதேசத்தின் போபாலில் வசித்து வந்த மாடலிங் அழகி குஷ்பு வர்மா, காதலன் காசிமுடன் பேருந்தில் பயணம் செய்தபோது உடல்நலக்குறைவால் மயக்கமடைந்துள்ளார். காதலன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தலைமறைவான நிலையில், சிகிச்சை பலனின்றி குஷ்பு உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், தடயவியல் சோதனைக்காக உள்ளுறுப்புகள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசிம் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.




