
மாடியில் இருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை – விசாரணையில் வெளிவந்த பகீர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தெற்கு பர்கனாஸ் மாவட்டம் கஸ்பா பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேக் ஷான் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவன் ஷேக் ஷான் நேற்று மாலை பள்ளிக்கூடத்தின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த சக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஷேக் ஷானை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மாணவன் ஷேக் ஷானை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, “பாடம் சரியாக படிக்காததால் தன் மகனை இரு ஆசிரியர்கள் கிண்டல் செய்ததாகவும், அதனால் மனமுடைந்து இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் ஷேக் ஷானின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தன் மகன் உயிரழப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.