
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் அருகே கிள்ளனூரை சேர்ந்தவர் லோகநாதன்(59). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மனைவியுடன் குன்றாண்டார்கோவிலில் உள்ள முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பைக்கில் சென்றார்.
அப்போது சாலையின் குறுக்கே ஓடிய மாட்டின் மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லோகநாதன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து உடையாளிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.